Producer J Sathish Kumar; நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கைவைக்க முடிவு? கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏராளமான படங்களும் முடங்கியுள்ளன.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால், நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கைவைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கை வைக்க தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (JSK – J Sathish Kumar) வற்புறுத்தியுள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகெட்ட நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகம் முடங்கியுள்ளது. பணிகளும் முடங்கியுள்ளது.
தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்கள், திரைக்கு வரயிருக்கும் படங்களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர், இசையமைப்பாளர்கள், முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்திலிருந்து குறைந்தபட்சமாக 30 சதவிகிதம் சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் அது தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு, திரைத்துறை பைனான்சியர்களும் 2 மாதம் அல்லது 3,4 மாதங்களோ வட்டி தொகையினை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு வழக்கம் போல் திரையரங்குகள் செயல்பட்டால், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை மாறி மாறி வெளியாகும் வகையில் சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதற்கு திரையரங்கு திரையரங்கு சங்கமும், திரைப்பட விநியோகஸ்தர் சங்கமும் துணை நிற்கவேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.