Home சினிமா கோலிவுட் பேத்தியை கொஞ்சி மகிழும் ராதிகா: வேடிக்கை பார்க்கும் சரத்குமார்!

பேத்தியை கொஞ்சி மகிழும் ராதிகா: வேடிக்கை பார்க்கும் சரத்குமார்!

1810
0
Radhika Sarathkumar Grand Daughter

Raadhika Sarathkumar Grand Daughter Radhya Mithun; பேத்தியை கொஞ்சி மகிழும் ராதிகா: வேடிக்கை பார்க்கும் சரத்குமார்! தனது மகள் ரயனுக்கு பிறந்த பெண் குழந்தையை கொஞ்சி மகிழும் ராதிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகளின் குழந்தையை கொஞ்சி மகிழும் ராதிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று ராதிகா – சரத்குமார் குடும்பம். இவரகளது குடுபம்பத்தில் பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்.

வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடித்து வருகிறார். ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரயன் – அபிமன்யு மிதுன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி ரயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு அம்மாவின் பெயரில் வரும் ராதிகாவின் முதல் இரு எழுத்துக்களை ஆரம்பமாக வைத்து ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தனது மகள் வயிற்று பேத்தியை ராதிகா கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகா தனது பேத்தியை கொஞ்சி மகிழ்வது போன்றும், அருகில் சரத்குமார் உட்கார்ந்து சிரித்தபடி வேடிக்கை பார்ப்பது போன்றும் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரன் அபிமன்யு மிதுனின் டீ சர்ட் அங்குள்ள சுவற்றில் வைக்கப்பட்டுள்ளது. இது அவரது வீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் குடும்பத்தோடு தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில், ராதிகா தனது பேத்தியோடு நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபடப்பிடிப்பு எப்போது தொடங்கலாம்? குஷ்பு முக்கிய தகவல்!
Next articleசார் நீங்க மொத்தமா ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ கொடுத்துருங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here