ரபேல் ஊழல், பாஜக மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு. மோடி அரசின் ஊழலை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஊதி பெரிதாக்கி விட்டனர்.
ரபேல் ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சி.பி.ஐ. விசாரணை குழுவின் இயக்குனரை கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் மாநிலத்தில், நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று ராகுல் காந்தி பேசியதாவது,
”ரபேல் போர் விமானங்களை வாங்கும்போது நடைபெற்ற ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதும், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளனர். என காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் ”மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியின் மகளுடைய வங்கி கணக்கில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட மெஹுல் சோக்சி என்பவர் பணத்தை டெபாசிட் செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதன் மூலமே பாஜக இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அரசு. ஏமாற்றும் அரசு என கடும் விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி.