Home Latest News Tamil பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!

பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!

517
0
பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது

பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!

சமீபத்தில் நடந்த காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல்  பங்கேற்று பெண்களை பற்றி முரண்பாடான கருத்துக்களைக்கூறி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

இவர்களின் எதிர்பாராத இச்செயலால் பி‌சி‌சி‌ஐ இருவருக்கும் இடைக்காலத்தடை விதித்திருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரையும் வருத்தெடுத்தனர்.

பி‌சி‌சி‌ஐ முடிவு

நிலுவையில் இருந்த விசாரணையை பி‌சி‌சி‌ஐ சுமூகமாக முடித்து இருவரையும் இந்திய அணிக்கு விளையாட அனுமதித்தது. இதுபற்றி நேற்று (வியாழக்கிழமை) பி‌சி‌சி‌ஐ நேரடியாக ஊடகங்களிடம் தெரிவித்தது.

நடந்து கொண்டிருக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் பங்கேற்க பாண்ட்யாவுக்கு அனுமதியளித்துள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய எ அணிகள் விளையாடும் தொடரில் பங்கேற்க கே.எல்.ராகுலுக்கு அனுமதியளித்துள்ளது.

பி‌சி‌சி‌ஐயின் இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலாக ஆதரவு வந்து கொண்டே இருக்கிறது.

இது இருவருக்கும் மிகப்பெரிய ஒரு பாடமாக இருக்கும் என்றும் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Previous articleகோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!
Next articleநான் பாஜகவில் சேர்கிறேன்: தமிழிசையிடம் கூறிய உதயநிதி! நடந்தது என்ன?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here