ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதுவரை 16 லட்சம்பேர் பார்த்துள்ளனர்.
ரஜினிகாந்த் 2.ஒ முடிந்த கையோடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கின்றார்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள், மெழுவர்த்தி ஸ்டாண்டை ஆக்ரோசமாக வீசியபடி நடந்து வருகின்றார். இசை கீபோர்டுகள் நொறுங்குகின்றன. பேப்பர் தாள், மொபைல், கண்ணாடி, கத்தி ஆகியவை பறக்கின்றன.
சன்பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் படம் காதலில் விழுந்தேன். நிறைய புதுமுகங்களுடன் வெளிவந்த இப்படத்தை, மீண்டும் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பி சூப்பர் ஹிட் படமாக மாற்றினர்.
கருணாஸ் நடிப்பில் வெளிவந்த ‘திண்டுக்கல் சாரதி’ படமும் அதே பாணியில் வெற்றிப்படமாகியது. ஆனால் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்தவர்கள் எண்ணிக்கை மிகமிக குறைவு என்பது அதிர்ச்சியளிக்கின்றது.
இதுவரை பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை 16 லட்சம்பேர் பார்த்துள்ளனர். இதை சன்டிவியின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். அந்த சேனலின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 16 லட்சம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் சேனலின் சப்ஸ்கிரைபர் மட்டுமே போஸ்டரை பார்த்துள்ளனர். சன்பிக்சர்ஸ் இப்படத்தை சரியாக புரோமோஷன் செய்யவில்லை. மேலும், 2.ஒ டீசர் அறிவிப்பை சங்கர் ட்விட்டரில் நேற்று வெளியிட்டார்.
இவற்றைவிட ரஜினியின் அரசியல் அறிவிப்பு, தெளிவில்லாத அரசியல் பேட்டிகள் மூலம் மக்கள் செல்வாக்கை ரஜினி இழந்துள்ளார். இதன் காரணமாக, மோஷன் போஸ்டரின் பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். .