RRR Telugu Motion Poster; நீர்க்குமிழி, தீ பிழம்புகளோடு வெளியான ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டர்! இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.
RRR Motion Poster
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆர்.ஆர்.ஆர். படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.
டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.
அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.
டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RRR Title Design Motion Poster