Rayanne Daughter Name Radhya Mithun; அம்மாவின் பெயரையே மகளுக்கு மாடலாக வைத்த ராதிகா மகள்! ராதிகா மகள் ரயன் தனது அம்மாவின் பெயரைப் போன்றே கொஞ்சம் மாடலா மாற்றி தனது மகளுக்கு ராத்யா என்று பெயர் சூட்டியுள்ளார்.
ராதிகாவின் பேத்திக்கு ராத்யா என்று ராதிகாவின் மகள் ரயன் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று ராதிகா – சரத்குமார் குடும்பம். இவரகளது குடுபம்பத்தில் பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்.
வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடித்து வருகிறார். ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரயன் – அபிமன்யு மிதுன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி ரயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது அந்த குழந்தைக்கு அம்மாவின் பெயரில் வரும் ராதிகாவின் முதல் இரு எழுத்துக்களை ஆரம்பமாக வைத்து ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக வளர வேண்டும்.
அவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவர்களிடமிருந்து வந்தது. அவர்களைப் போன்று எனது மகள் ராத்யாவும் நிறைய சாதனைகள் புரிவாள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.