Home சினிமா கோலிவுட் பியூட்டி குயீன் சமந்தா பர்த்டே டுடே!

பியூட்டி குயீன் சமந்தா பர்த்டே டுடே!

426
0
Samantha Birthday Today

Samantha; பியூட்டி குயீன் சமந்தா பர்த்டே டுடே! நடிகை சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமந்தா பிறந்தநாள் இன்று…

சமந்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் பல்லாவரம், சென்னை. அப்பா தெலுங்கு, அம்மா ஆலப்புழா, கேரளா. படித்தது எல்லாமே சென்னையில் தான். இப்படி, கலப்பு மொழியைச் சேர்ந்த குடும்பத்தில் சமந்தா பிறந்து வளர்ந்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.

ஆனால், இந்தப் படம் அவருக்கு சிறப்புத் தோற்றம். அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

நான் ஈ படம் தான் தமிழில் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. ஒல்லியான தோற்றம் ஹோம்லி லுக்கில் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதோடு, உணர்ச்சி மற்றும் உணர்வுகளை கச்சிதமாக இடத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தக் கூடியவர்.

தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தார். இந்தப் படம் சிறந்த நடிகைக்காக பிலிம்பேர் விருதை பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து, சூர்யாவுடன் இணைந்து அஞ்சான், விஜய் உடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் என்று வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதிலும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சினிமாவில் காலூன்றி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்து வருகிறார். விஜய் மற்றும் சமந்தா காம்பினேஷன் சினிமாவில் ஹிட் படமாக அமைகிறது. கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நண்பர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleஎப்போதும் பெண்கள் சமையல் தான் செய்ய வேண்டுமா? கொந்தளித்த மாளவிகா மோகனன்!
Next articleசமந்தா பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here