Home சினிமா சர்கார் சிங்கிள் ட்ராக் பாடல் இப்படிதான் இருக்கும்!

சர்கார் சிங்கிள் ட்ராக் பாடல் இப்படிதான் இருக்கும்!

467
0
சர்கார் சிங்கிள் ட்ராக்

சர்கார் சிங்கிள் ட்ராக் வரும் 24-ம் தேதி வெளியிட உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

தன்னுடைய ஓட்டு திருட்டுத் தனமாக பதிவாகியதை கண்டு, முழுநேர அரசியல்வாதியாக உருவெடுப்பார் விஜய். இது தான் படத்தின் ஒன் லைன்.

படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சர்கார் படத்தின் ‘சிங்கிள் ட்ராக்’ வரும் 24-ம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்பது பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளது.

பாடல் ஜாலியான மூவ்மெண்டுடன் துவங்கும். அதே நேரத்தில், கேலி கிண்டலுடன் பாடல் வரிகள் உள்ளனவாம். புது புது வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளனர்.

பாடல் வரிகள் நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleசதி வலைக்குள் திமுக; நற்பெயர் நிலைக்குமா?
Next articleமுத்தலாக் தடைச் சட்டம்: பாஜகவின் அவசரம்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here