Home நிகழ்வுகள் தமிழகம் சதி வலைக்குள் திமுக; நற்பெயர் நிலைக்குமா?

சதி வலைக்குள் திமுக; நற்பெயர் நிலைக்குமா?

340
1
சதி வலைக்குள் திமுக

சதி வலைக்குள் திமுக. வரும் சட்டமன்றத் தேர்தல் வரையிலாவது, திமுகவின் நற்பெயர் நிலைக்குமா என பரிதாப நிலையை நோக்கி அக்கட்சி செல்கின்றது.

கலைஞர் மரணத்திற்கு பின், திமுகவிற்கு அனுதாப அலைகள் உருவாகியுள்ளது. தமிழக அரசியலில், சரியான தலைமை இல்லாமலிருப்பதும், திமுகவிற்கு சாதகமே.

இந்நிலையில், பிரியாணி கடை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம். செல்போன் கடை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம். பார்லர் பெண் தாக்கப்பட்ட சம்பவம். இப்படி, வீடியோ ஆதாரத்துடன் திமுகவின் செல்வாக்கை, அக்கட்சியினரே சரிப்பது வாடிக்கையாகிவிட்டது.

முதல் இரண்டும் எதேச்சையாக நடைபெற்ற சம்பவம் . ஆனால், சமீபத்தில் வெளியான பார்லர் பெண் தாக்குதல் வீடியோ, திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். அதன் வீடியோவைப் பார்லர் பெண் சத்யா, தற்போது வெளியிட்டுள்ளார்.

திமுக பிரமுகர் செல்வகுமாருக்கும், மயூரி பியூட்டி பார்லர் முதலாளி சத்யாவுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. பின்னாளில் சத்யா, செல்வகுமாரை துண்டித்துவிட்டு திமுக பிரமுகர் பிரபாகரனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

சத்யா அவ்வப்போது, செல்வாக்கில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும், பணத்திற்காக ஆட்களை மாற்றுவதும் வாடிக்கையே என அரசியல் கட்சியினர் சிலர் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதங்கள் கழித்து அந்த வீடியோவை வெளியிட்ட பின்னணி என்ன? சத்யாவை தூண்டியவர் யார்? இதனால் அவருக்கு என்ன லாபம்? என  பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

Previous articleTeaser Mistake 2 0 | 2.ஓ டீசர் குறைகள்
Next articleசர்கார் சிங்கிள் ட்ராக் பாடல் இப்படிதான் இருக்கும்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here