Home சினிமா கோலிவுட் அப்பாவுக்கு முருங்கைங்காய், மகனுக்கு முதல் இரவு! பலே பலே!

அப்பாவுக்கு முருங்கைங்காய், மகனுக்கு முதல் இரவு! பலே பலே!

3761
0
Shanthanu Athulya Ravi

Shanthanu Bhagyaraj; சாந்தனு மற்றும் அதுல்யா நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

சக்கரக்கட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு (Shanthanu). தொடர்ந்து சித்து+2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் அப்பா பாக்யராஜ் பெரிய மாஸ் நடிகராக வலம் வந்திருந்தாலும், மகனால், அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி வரமுடியவில்லை. தொடர்ந்து நடித்த படங்கள் விறுவிறுப்பாக அமையவில்லை.

தனசேகரன் இயக்கத்தில் வந்த வானம் கொட்டட்டும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் துணை நடிகராக் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.

இதன் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஆம், ஸ்ரீஜர் (Srijar) இயக்கத்தில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாந்தணுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி (Athulya Ravi) நடிக்கிறார்.

இதற்கு முன்னதாக இயக்குநர் ஸ்ரீஜர் எடால் (Edaal) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், அந்தப் படம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனினும், தற்போது சாந்தணுவை வைத்து புதிய ரொமாண்டிக் படம் ஒன்றை இயக்குகிறார்.

இதில், பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, பிராங்க் ராகுல், ராஜு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை சிவசுப்பிரமணியன் மற்றும் சரவணபிரியனுடன் இணைந்து ரவிந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். தரன் படத்திற்கு இசையமைக்கிறார்.

முதல் இரவைப் பற்றியும், அதில் நடக்கும் சடங்கு முறைகளைப் பற்றியும் விவரிக்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பாக்யராஜ் நடிப்பில் வந்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைங்காய் காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

அப்பா பாக்யராஜுக்கு முருங்கைங்காய் என்றால் மகன் சாந்தணுவிற்கு முதல் இரவு சீன் ரொம்பவே ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇரத்த கறைக்கு நடுவில் கவின் – அம்ரிதா ஐயர்: லிப்ட் ஃபர்ஸ்ட் லுக்!
Next articleபுகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டேன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here