Home சினிமா கோலிவுட் விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி பர்த்டே டுடே!

விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி பர்த்டே டுடே!

219
0
HBD Shilpa Shetty

Shilpa Shetty Birthday Today; விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி பர்த்டே டுடே! பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷில்பா ஷெட்டியின் 45 ஆவது பிறந்தநாள் இன்று.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மங்களூருவில் பிறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

கடந்த 1991 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியதும், லிம்கா தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடித்தார். இது போன்று பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து, 1992 ஆம் ஆண்டு Gaata Rahe Mera Dil என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு வந்தது. இந்தப் படத்தில், ரோனித் ராய் மற்றும் ரோகித் ராய் இருவரும் ஹீரோவாக நடித்தனர்.

இருவரையும் காதலிக்கும் பெண்ணாக ஷில்பா ஷெட்டி நடித்தார். இந்தப் படம் ஒரு முக்கோண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், ஏதோ ஒரு காரத்திற்காக இந்தப் படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் தான் இயக்குநர் அப்பாஸ் முஸ்தான் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் இணைந்து Baazigar என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் சிறந்த துணை நடிக்கான இரு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்திலும், தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

ஹிந்தி, தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். நடிகை, தொழிலதிபர், மாடல் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டி தம்பதினருக்கு சமீஷா ஷெட்டி குந்த்ரா மற்றும் வியான் ராஜ் குந்த்ரா என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில் HBD Shilpa Shetty என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமேக்னா ராஜ் கர்ப்பம்: குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜா!
Next articleசியான்60 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here