Shilpa Shetty; வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்: விளக்கம் கொடுத்த ஷில்பா ஷெட்டி! வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன் என்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
2ஆவது குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வந்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கும் ஷில்பா ஷெட்டி பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.
பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆவது குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்தனர். இந்தக் குழந்தையைத் தான் ஷில்பா ஷெட்டி வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.
இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், ஷில்பா ஷெட்டி கூறும்போது, என் மகனுக்கு சகோதர உறவோடு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான போது, இருமுறை நான் கருவுற்ற போதும், உடல்நலக் குறைபாட்டினால், கரு வளராமல் கருச்சிதைவு ஏற்பட்டது.
அதன் பிறகு தான் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.