Shilpa Shetty; விஜய்யோடு போட்டி போட்ட ஷில்பா ஷெட்டி: வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் சேலஞ்ச்! நடிகை ஷில்பா ஷெட்டி விஜ்ய நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி, விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தினந்தோறும் அறிவுறுத்தப்பட்ட வரப்படுகிறது.
எப்போதுமே பிஸியாக இருந்த பிரபலங்கள் இப்போதும் தங்களை பிஸியாகவே வைத்திருக்கின்றனர்.
ஆம், வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வதற்கு உழுது போடுவது, துணி துவைப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, ஒருவருக்கொருவர் சேலஞ்ச் டாஸ்க் கொடுப்பது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டி டிக் டாக்கில் ஒரு டாஸ்க் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஷில்பா ஷெட்டி விஜய்யுடன் போட்டி போட்டுள்ளார் என்றும், மாஸ்டர் கம்மிங் பாடலுக்கு விஜய் நன்றாக ஆடுகிறாரா? இல்லை ஷில்பா ஷெட்டி நன்றாக ஆடுகிறாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பிரபலங்கள் பலரும் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.