Home நிகழ்வுகள் 15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில் 

15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில் 

831
0
15-20 வினாடிகள்

15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில்

கடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் எல்லோராலும் அதிகமாகப் பேசப்பட்ட இருவீரர்கள் கேப்டன் பிரிதிவ் சா, துணை கேப்டன் சுப்மன் கில்.

பிரிதிவ் சா ஏற்கனவே இந்திய அணியில் மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார். அதிலும் சிறப்பாக செயல்பட்டார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சியின் போது  எதிர்பாராத விதமாக காயமடைந்து பங்கேற்க முடியாமல் நாடு திரும்பினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டதை, தன்னுடைய போனில் பார்த்தவுடன் 15 முதல் 20 வினாடிகள் திகைத்துப் போனதாக கில் கூறியுள்ளார்.

இரவு 1 மணிக்கு தனக்கு வாட்ஸ்ஆஃப் செயலியில் விஜய் சங்கர், ஹார்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவும்; சுப்மன் கில், கே‌.எல். ராகுலுக்குப் பதிலாகவும்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வந்ததாக கூறியுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான கில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் 9 இன்னிங்சில் 728 ரன்களும் சராசரி 104.00 தியோதார் போட்டியில் 3 இன்னிங்சில் 168 ரன்களும் எடுத்துள்ளார்.

கே‌.எல். ராகுலின் இடைக்காலத்தடை சுப்மன் கில்க்கு எளிதாக வழி வகுத்தது. ஏற்கனவே கில், லிஸ்ட் A போட்டிகளில் சராசரி 50 மற்றும் முதல் வகுப்பு போட்டிகளில் சராசரி 80க்கு மேல் வைத்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. கில் சிறப்பாக செயல்பட்டால் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

Previous articleராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ
Next articleயுபிஐ – ஒரு நொடியில் பணம் அனுப்புவது எப்படி?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here