Home சினிமா கோலிவுட் மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய டி.ராஜேந்தர்; ஏப்ரல் 26 கல்யாணம்

மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய டி.ராஜேந்தர்; ஏப்ரல் 26 கல்யாணம்

2047
0
மகனின் காதலுக்கு

மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய டி.ராஜேந்தர்; ஏப்ரல் 26 கல்யாணம்

பொதுவாக திரைப்பிரபலங்கள், பணக்காரர்கள் வயதில் மூத்த பிள்ளைகளுக்குத்தான் முதலில் திருமணம் செய்துவைப்பார்கள்.

ஆனால் இயக்குனர் டி.ராஜேந்தர் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரிவர்சில் திருமணம் செய்துவைத்து வருகிறார்.

சில வருடங்கள் முன்பு டி.ஆர் மகள் இலக்கியாவின் திருமணத்தை நடத்தி வைத்தார். தற்பொழுது இரண்டாவது மகன் குறளரசனுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் காதலிக்காக குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி சிம்பிளாக திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போ சிம்புவுக்கு எப்போ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் சிம்பு-ஹன்சிகா மீண்டும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது.

லண்டன் சென்ற போதுதான் சிம்பு, நயன்தாராவைப் பிரிந்தார். தற்பொழுது அதே லண்டனில் ஹன்சிகாவுடன் இணைந்துள்ளார்.

ஏற்கனவே பிரிந்து, மீண்டும் இணைந்துள்ளனர். எனவே, இந்த முறை நங்கூரம் போல் நச்சென்று ஒட்டிக்கொண்டுள்ளனராம்.

கூடிய விரைவில் சிம்புவின் திருமணச் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காதல் தோல்வி செய்தி வந்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல…

Previous articleஅடிமாட்டு விலைக்குச் சென்றுவிட்டது தேமுதிக பேரம்
Next articleஇன்றைய கூகிள் டூடுல்: ஆல்கா லேடிசென்ஸ்கயா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here