Home சினிமா கோலிவுட் குடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்: FamiliesFavouriteSK டிரெண்டிங்!

குடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்: FamiliesFavouriteSK டிரெண்டிங்!

471
0
Sivakarthikeyan

Sivakarthikeyan; குடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்: FamiliesFavouriteSK டிரெண்டிங்! குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி பேசி அசத்தியுள்ளார்.

மேலும், படித்துக் கொண்டிருந்த நேரத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷன் வந்துள்ளது.

இதற்காக தனது படிப்புக்கு 3 மாதம் இடைவெளி எடுத்துக் கொண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றார்.

இதையடுத்து, தல அஜித்தின் ஏகன் படக்குழுவினர் சிவகார்த்திகேயனை தங்களது படத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த பகுதி இறுதி கட்டிங்கிற்கு வரவில்லை.

இந்த நிலையில், தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மெரினா படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயனைக் கண்டு தனது 3 படத்தில் தனுஷிற்கு நண்பராக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன் பிறகு மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்தார். இவரது எதார்த்தமான நடிப்பு, ரைமிங்கில் காமெடி செய்யும் விதம் ரசிகர்களை வியக்க வைத்தது.

தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை, வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், டாக்டர், அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் திகழ்கிறார்.

எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே குடும்ப பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து ஒவ்வொருவரது இல்லங்களிலும் நம்ம வீட்டுப் பிள்ளையாக திகழ்கிறார்.

இப்படி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக திகழ்கிறார்.

இந்த நிலையில், ஹலோவில், FamiliesFavouriteSK என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleவைரலாகும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா புகைப்படம்!
Next articleவெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்திய மக்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here