Sonakshi Sinha; டுவிட்டர் கணக்கை டிஆக்டிவேட் செய்கிறேன்: சோனாக்ஷி சின்ஹா! பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டர் கணக்கை டிஆக்டிவேட் செய்வதாக அறிவித்துள்ளார்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டர் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்வதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகியிருப்பது தான் மன அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பு.
இதுவே முதல் படி. இப்போதெல்லாம் டுவிட்டரில் தான் எதிர்மறையான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதற்காகவே நான் எனது டுவிட்டர் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனது இந்த பதிவிற்காக எதிர்வினைகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பற்றி எரியட்டும். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.