SPB Corona Song; நாளை மீள்வாய் தாயகமே: எஸ்பிபி பாடிய கொரோனா பாடல்! வைரமுத்து எழுதிய கொரோனா பாடலுக்கு பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா தாக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவிலும் வேக வேகமாக பரவி வருகிறது.
யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் கொரோனாவுக்கு பாடல் வரிகள் உருவாக்கியுள்ளார்.
அவர் எழுதிய கொரோனா பாடல் வரிகளுக்கு பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது குரலில் பாடி அசத்தியுள்ளார்.
கரோனா கரோனா கரோனா… அணுவை விடவும் சிறியது அணுகுண்டைப் போல் கொடியது என்று தொடங்கும் அந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மெலடியாக தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை மட்டுமே கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று எஸ்பிபி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிபி பாடிய கொரோனா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர், எங்கிருந்து எவனோ வர்றானாம் எல்லாரவையும் வந்து கொல்றானாம்….என்ற கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.