Home Latest News Tamil கொரோனா பாடல், எஸ்பிபி – வைரமுத்து கூட்டணி

கொரோனா பாடல், எஸ்பிபி – வைரமுத்து கூட்டணி

295
0

கொரோனா வைரஸ் தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்காக வைரமுத்து வரிகள் எழுத அதை எஸ்பிபி பாடலாக பாடி உள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஸ்தம்பித்துள்ளது.

உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்து உள்ளார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்தியாவில் 9000 மேற்பட்ட மக்கள் இதுவரை பதித்துள்ளார்கள். இதனால் இந்திய பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மக்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் பொழுதைப் போக்க பல பாடகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் தாங்கள் பாடிய பாடல்களை பாடி வருகிறார்கள்.

இதனால் மக்கள் அவர்கள் விரும்பிய பாடலை கேட்டு வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாடிய ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை வரிகள் மாற்றி பாடியுள்ளார்.

முத்து படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வைரமுத்து வரிகள் எழுத ரகுமான் இசையில் எஸ்பிபி பாடியிருந்தார்.

தற்போது அதே இசையில் வைரமுத்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக வரிகள் எழுத, இந்த பாடலை எஸ்பிபி மீண்டும் பாடி வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது. மிகவும் அருமையாக உள்ளது. பாடல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Previous articleவீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Next articleவீட்டு முன்பு 8 திருநங்கைகள் போராட்டம்: ரஜினிகாந்த் ரூ.5000 நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here