Home விளையாட்டு இலங்கைக்கு எதிரான 2வது டி20 யில்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

இலங்கைக்கு எதிரான 2வது டி20 யில்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

203
0

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ்  அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்படி 3 ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகளில் தோற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் முதல் போட்டி பல்லிக்கல்லே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

ஒஷனே தாமஸ் 6 விக்கெட்டுடன் 25 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது

2020 போட்டி நேற்று மார்ச் 6 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக
சனாக 31, மேத்யூஸ் 23, திசாரா பெரேரா 21, குஷால் பெரேரா 11, ஜெயசூர்யா 16, குசல் மெண்டிஸ் 11 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆலன் 2, பிராவோ, காட்ரேல் மற்றும் ஒஷனே தாமஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அன்ட்ரு ரசல் அதிரடியில் 17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

பிரண்டன் கிங் மற்றும் ஹெட்மையர் தலா 43 ரன்கள் எடுக்க, அடுத்து களம் இறங்கிய அண்ட்ரு ரசல் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

ரசல் 14 பந்துகளில் 6 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

கடந்த போட்டிகளில் இவர் 14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை தரப்பில் அஞ்சலோ மெத்யூஸ், லஹிரு குமார மற்றும் சனாக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ் ஆனதிற்கு பதிலடி தரும் வகையில் டி20 போட்டிகளில் இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அண்ட்ரு ரசல் வென்றார்.

நாங்கள்தான் டி20 சாம்பியன் என்று மறுபடியும் கீரன் பொல்லார்டு தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிரூபித்துள்ளது.

Previous articleInternational Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 
Next articleஜெயலலிதா சிறை; குன்ஹா தீர்ப்பு – காரணம் அன்பழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here