Sunaina; கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா.
ரஜினிகாந்த் நடிப்பில் வந்த சிவாஜி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். ஆனால், இறுதி கட்ட பணியின் போது அவரது காட்சி நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
காதலில் விழுந்தேன் படத்தைத் தொடர்ந்து வரிசையாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். ஆம், தனது நிலா நிலா ஓடி வா, ஹை பிரைஸ்டெஸ், ஃபிங்கர்டிப், சதரங்கம் ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்துள்ளார். இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமா பிரபலங்கல், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் சுனைனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுனைனாவின் பிறந்தநாளை முன்னிட்டு HBD Sunaina என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.