Home சினிமா கோலிவுட் வாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே!

வாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே!

322
0
HBD Sunny Leone

Sunny Leone; வாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே! ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சன்னி லியோன் வாடகைத்தாய் மற்றும் பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது மூலம் அழகான குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.

சர்ச்சை நடிகை சன்னி லியோன் பிறந்தநாள் இன்று.

கடந்த 1981 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது இயற்பெயர் கரன்ஜித் கௌர் ஓஹ்ரா. முதலில் ஜெர்மனியில் ஒரு பேக்கரியில் வேலை செய்துள்ளார்.

அதன் பிறகு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார்.

அதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு ஹாலிவுட், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இசைக்கலைஞரான டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எப்போதும் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட சன்னி லியோ கடந்த 2017 ஆம் ஆண்டு நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக ஆனார்.

வாடகைத்தாய் மூலம் தாயான சன்னி லியோனின் சந்தோஷத்தை அவரது கணவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி மற்றும் சர்ச்சை நடிகையாக இருந்த சன்னி லியோன் இந்தியாவில் இருக்க கூடாது என்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், நடிப்பது வேறு, உண்மை வேறு என்பதை நிரூபித்துக் காட்டி அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

ஆம், எந்த நடிகையும் செய்யத் தயங்கும் வாடகைத்தாய் மற்றும் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை துணிச்சலாக செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

மேலும் பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொடர்ந்து சன்னி லியோன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் தாண்டி இன்று அவரை பாராட்டும் செயல்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை சன்னி லியோன் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில், #HappyBirthdaySunnyLeone என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleநான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்!
Next articleதமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு ? முதல்வர் ஆலோசனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here