Home சினிமா கோலிவுட் என் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா!

என் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா!

323
0
Suriya Birthday Special Poster

Suriya Birthday Poster; என் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா! இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என் சகோதரரும் நடிகருமான சூர்யாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே என்ற பாடலின் ஒரு நிமிட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் காமென் டிபி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், என் சகோதரரும் நடிகருமான சூர்யாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டரை பார்க்கும் போது அது சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் போன்று தெரிகிறது.

மேலும், #HappyBirthdaySuriya என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SooraraiPottru டுவிட்டர் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு!
Next articleஇருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here