எவன் எதிர்த்தாலும் படம் ஆன்லைனில் வெளியாகும் – உச்சகட்ட கோபத்தில் சூர்யா. பொன்மகள் வந்தாள் படத்தை நிச்சயம் சூர்யா வெளியிட முடிவு செய்து உள்ளனர்.
கமல் முதன்முதலில் விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிடத் திட்டம் இட்டார். ஆனால் அப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்பொழுது திரைப்படங்கள் நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாகி வருகின்றது. இது மக்களிடமும் பெரிய ஆதரவை பெற்று வருகிறது.
இதை அறிந்த சூர்யா டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிட முடிவு செய்தார். தியேட்டர் உரிமையாளர்கள் உடனே சூர்யா படத்தை தியேட்டரில் வெளியிட தடை என அறிவித்தனர்.
அதேநேரம் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பிளாட்பார்மை ஆதரித்து வரவேற்றனர். சூர்யா யார் தடுத்தாலும், எவன் எதிரில் வந்தாலும் படத்தை டிஜிட்டலில் வெளியிடுவது என முடிவு செய்து உள்ளனர்.
தற்பொழுது தமிழ் சினிமாவின் ஒரு தரப்பு டிஜிட்டலுக்கு ஆதரவாகவும், மறுதரப்பு எதிராகவும் சட்டையிட்டு கொண்டு உள்ளது.