Valimai Hindi Dubbing; ஹிந்தியில் வரும் தல அஜித்தின் வலிமை: ரசிகர்கள் கொண்டாட்டம்! அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.
போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்தது.
சென்னையில், அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போனி கபூர் மற்றும் மற்ற சினிமா பிரபலங்கள் பலரும் ஒரு வீடியோ பேட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் வலிமை படம் பற்றி பல்வேறு தகவல்களை போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதில், தமிழில் உருவாக்கப்பட்டு வரும் வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று போனி கபூர் கூறியதாக தகவல் வெளியானது.
மேலும், தென்னிந்திய சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களையும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள அஜித்தின் முதல் படம் வலிமை தான் என்பதால் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கு முன்பு அஜித் ஒரு சில பாலிவுட் படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன், சென்டிமெண்ட், எமோஷனல் காட்சிகள் அதிகம் கொண்டிருப்பதால், வலிமை படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.