Home சினிமா கோலிவுட் லாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வெள்ளை தாடி மீசையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

லாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வெள்ளை தாடி மீசையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

412
0
Laabam Dubbing

Vijay Sethupathi Laabam Dubbing; லாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படங்கள்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி தொடங்கியுள்ளார்.

லாபம் படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. நானும் ரௌடி தான், சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, உப்பென்னா, லா சிங் சத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல், க/பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாபம் படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசிய போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார்.

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தை விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், நிதிஷ் வீரா ஆகியோர் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டப்பிங் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, விஜய் சேதுபதி லாபம் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஹிந்தியில் வரும் தல அஜித்தின் வலிமை: ரசிகர்கள் கொண்டாட்டம்!
Next articleதிருமண தேதியை உறுதி செய்த ராணா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here