Home சினிமா கோலிவுட் சன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்!

சன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்!

0
342
Viswasam On Sun TV

Viswasam; சன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்! தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் சன் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவியில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.

குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதற்கு முன்னதாக 2 முறை விஸ்வாசம் படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

சன் டிவியில், விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்படுவதைத் தொடர்ந்து டுவிட்டரில், #Viswasam விஸ்வாசம் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, தமிழகத்தில் டிரெண்டிங்கில் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here