Home சினிமா கோலிவுட் அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி!

அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி!

264
0
Aishwarya Rai Bachchan

Aishwarya Rai Bachchan; மாமனார், கணவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி! அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மும்பையில் இருக்கும் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகி வந்த அனைவரும் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனினும், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அமிதாப் பச்சனின் மனைவியும், எம்பியுமான ஜெயா பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.

Previous articleசன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்!
Next articleஉயிருடன் இருந்த உடும்பை தீயில் சுட்ட நேரலை காணொளியை வெளியிட்ட வாலிபர் கைது: தெலுங்கானா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here