Home சினிமா கோலிவுட் தளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்!

தளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்!

412
0
HBD Thalapathy Vijay

Thalapathy Vijay Birthday; தளபதி விஜய் பிறந்தநாள்: தாறுமாறாக கொண்டாடும் ரசிகர்கள்! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உலகளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். எப்போதும், அண்ணா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஒவ்வொருவரது இதயங்களிலும் குடி கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

இவரது நடிப்பில் வரும் படங்கள் பெரும்பாலும் குழந்தைகள், பெண்களை மையப்படுத்தியே இருக்கும் என்பதால், குழந்தைகள், பெண்களுக்கு பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார்.

விஜய்க்கு ஏதாவது ஒன்று என்றால் ஒட்டு மொத்த உலகமே ஒன்று கூடும் நிலை வரும் என்பதற்கு உதாரணம் நெய்வேலி படப்பிடிப்பு சம்பவம்.

ஆம், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு ரசிகர்கள் வந்து விஜய்யை பார்த்துச் சென்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விஜய்க்கும், அவர் நடிக்கும் படங்களுக்கும் அரசியல் கட்சிகளால் நிறைய பிரச்சனைகள் வந்த பிறகு தான் படமே திரைக்கு வருகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்படியெல்லாம் பல தடைகளுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வரும் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெறுகிறது. இந்த நிலையில், தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் வைத்திருந்த நிலையில், தற்போது ஏகப்பட்ட டுவிட்டர் ஹேஷ்டேக், ஹலோ ஹேஷ்டேக் உருவாக்கி தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மாஸ்டர் படக்குழுவினர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் டிரைலருக்காகவும் விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

ஆனால், என்ன, மாஸ்டர் டிரைலர் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது.

எனினும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை வெளியிட்டு தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Previous articleஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் தீவிர கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது
Next articleஎன்னோட அண்ணா, என்னோட தளபதி: விஜய்க்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here