Home சினிமா கோலிவுட் விஜய்யின் மாஸ்டர் தீபாவளிக்கு வெளியீடு?

விஜய்யின் மாஸ்டர் தீபாவளிக்கு வெளியீடு?

307
0
Master Diwali Release

Vijay Master Diwali Release; விஜய்யின் மாஸ்டர் தீபாவளிக்கு வெளியீடு? தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.

மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.

அப்படி, இப்படி என்று எப்படியோ கஷ்டப்பட்டு மாஸ்டர் படத்தை உருவாக்கிவிட்டார்கள். ஆனால், என்ன வெளியிடமுடியவில்லை.

காரணம், கொரோனா வைரஸ். நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் படத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மாதம் ஆகும். அப்படியிருக்கும் போது மாஸ்டர் படம் இப்போதைக்கு திரைக்கு வராது.

மாறாக விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அன்றைய தினத்தில் விஜய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில், MasterOnJune22 என்ற ஹலோ ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.

தற்போது, MasterDiwali2020 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பிகில் படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் அறிவித்தபடி வெளியாகியிருந்தால் இன்றுவரை ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்திருக்கும் விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

வலிமை படமும் அடுத்தாண்டு தான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு ? முதல்வர் ஆலோசனை
Next articleஇந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காற்று மாசு(CO2) குறைவு: ஆய்வில் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here