Home சினிமா கோலிவுட் வைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பு புகைப்படங்கள்!

வைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பு புகைப்படங்கள்!

289
0
Mersal Movie

Thalapathy Vijay; வைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள்! தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெர்சல் பட படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மெர்சல்.

இந்தப் படத்தில் விஜய், வெற்றி மாறன், மாறன் மற்றும் வெற்றி என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

வெற்றி மாறன் மல்யுத்த வீரனாகவும், மாறன் டாக்டராகவும், வெற்றி மேஜிக்மேனாகவும் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆதலால், இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், தடையையும் மீறி மெர்சல் திரைக்கு வந்து ரூ.260 கோடிக்கும் அதிகமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது.

மெர்சல் ஆல்பம் 3 ஆண்டுகளைக் கடந்து யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போன்று சர்கார் படத்தின் ஹெச்டி புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Previous articleஅய்யோ கரண்ட் பில் ஒரு லட்சமா? கொந்தளித்த நடிகை கார்த்திகா நாயர்!
Next articleசாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிச்சாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here