Home சினிமா கோலிவுட் பால் வாங்க கூட காசு இல்ல: அஜித்தை பார்க்க ஆசைப்பட்ட தீப்பெட்டி கணேசன்!

பால் வாங்க கூட காசு இல்ல: அஜித்தை பார்க்க ஆசைப்பட்ட தீப்பெட்டி கணேசன்!

690
0
Theepetti Ganesan

Theepetti Ganesan; பால் வாங்க கூட காசு இல்ல: அஜித்தை பார்க்க ஆசைப்பட்ட தீப்பெட்டி கணேசன்! ரேணிகுண்டா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் தல அஜித்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.

தீப்பெட்டி கணேசன் அஜித்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக அண்மையில் ஒரு நேர்காணலில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இப்படத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, ஆயுத போராட்டம், பில்லா 2, முத்து நகரம், என்றென்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டை மன்னன் என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

எப்போதுமே பிஸியாக போய்க்கொண்டிருந்த நிலையில், தனது மேனேஜரால் சினிமா வாய்ப்பு குறைந்தது. பணமும் நஷ்டம் ஏற்பட்டது.

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட எனக்கு 10 ஆயிரம் பணம் கூட பெரிய தொகை. அந்த 10 ஆயிரம் நான் சம்பாதித்தாலும், அது எனது கைக்கு வராத காலகட்டம் கூட இருந்தது.

இப்படி நான் சம்பாதித்த பணங்கள் எனது கைக்கே வராமல் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு படத்தின் வாய்ப்பு வரும் போதும் மேனேஜர் அதிக சம்பளம் கேட்டதால் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் நிலை ஏற்பட்டது.

காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு தற்போது 2 மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் எனக்கு கால்கள் நடக்க முடியாமல் போனது.

இடையில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை கூட வந்தது. எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள்.

ஆனால், தற்போது கொரோனா லாக்டவுனில் இருக்கும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் குடும்பத்தோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

பால் வாங்க கூட காசு இல்லை. என்னால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட போதும் எனது மனைவி தான் என்னையும், குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது எனக்கு அஜித் சார் உதவி செய்ய வேண்டும் என்று அண்மையில் அளித்த பேட்டியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அஜித்தை சந்திக்க எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.

எனது உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் தீப்பெட்டி கணேசன் என்றுதான் பலரும் கூப்பிடுவார்கள்.

படப்பிடிப்பின் போது என்னை கார்த்திக் என்று அழைத்த ஒரே கடவுள் அஜித் சார்.

பல முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். ஆனால், ஒருமுறை கூட அவரை சந்திக்க முடியவில்லை.

அஜித் சார் உதவி செய்தால், என் குழந்தைகளுக்கு நல்லவொரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், எனக்கு உதவி செய்ய விரும்புவோர் முத்து: 9841303021 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅயலானுக்கு போட்டியாக வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர்!
Next articleஎன்னது ஆகஸ்டில் சூரரைப் போற்று படமா? யார் சொன்னது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here