Tom and Jerry Gene Deitch; டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் காலமானார்! புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரை இயக்கிய இயக்குனர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவு காரணமாக 95 ஆவது வயதில் காலமானார்.
டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன்று காலமானார்.
குட்டி எலி, பூனையை வைத்து குழந்தைகளை கவரும் வகையில் வேடிக்கை நிறைந்த டான் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரை வில்லியன் ஹன்னா, ஜோசப் பர்பெரா ஆகியோரால் கடந்த 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஹன்னா மற்றும் பர்பெரா இருவருமே இந்த கார்ட்டூன் தொடரை இயக்கி வந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜீன் டெய்ச் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரை இயக்கினார்.
இந்த தொடரைத் தவிர பாப்பாய் எனும் கார்ட்டூ தொடரின் சில எபிசோடுகளையும் ஜீன் டெய்ச் இயக்கியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் விமானப்படையில் விமானியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அனிமேஷன் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி அந்தப் பணியை தொடங்கியுள்ளார்.
கடந்த 1960 ஆம் ஆண்டு மன்றோ என்ற கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கியதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு விண்ட்சர் மெக்காய் விருதும் பெற்றுள்ளார்.
டாம் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரின் 13 எபிசோடுகள் வரை ஜீன் டெய்ச் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 95 ஆவது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு கடந்த வியாழன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.