முத்தலாக் தடைச் சட்டம். தலாக்… தலாக்… தலாக்… எனக் கூறும் முத்தலாக் முறைக்கு, விரைவில் தடைச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.
தலாக் என்ற வார்த்தையை மும்முறை கூறினால், இஸ்லாமிய மதத்தில் விவாகரத்து கிடைத்து விடும். அதாவது மூன்று நொடிகள் போதும்.
இஸ்லாமிய மதம் மட்டுமே விரைவில் விவாகரத்து வழங்கும் மதம். இது ஒரு பக்கம் எளிமையாக கருதப்பட்டாலும், இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாஜக தலாக் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா:
இந்த மசோதாவின் படி, தலாக் என மும்முறை சொல்லி விவாகரத்து பெரும் கணவர், கிரிமினல் குற்றவாளியாக கருதப்படுவார். ஜாமீன் கிடைக்காது. 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதுவே அந்த மசோதா. இம்மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
முத்தலாக் தடைச் சட்டம்:
தற்பொழுது, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’வைச் சற்று திருத்தி ‘முத்தலாக் தடைச் சட்டம்’ என பாஜக ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, காவல் நிலையத்தில் ஜாமீன் பெற முடியாது. ஆனால், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்.
முத்தலாக் விவாகரத்து தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். வேறு எவரும் பெண்ணின் சார்பில் புகார் அளிக்க முடியாது.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கணவன் மற்றும் மனைவியின் இடையே சமரசம் ஏற்பட்டால், வழக்கை ரத்து செய்துவிட்டு சேர்ந்து வாழலாம்.
ஜனாதிபதி ஒப்புதல்:
மேற்கண்ட மூன்று திருத்தங்களுடன், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த கூட்டத் தொடரில், இச்சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்.
வெடித்தது சர்ச்சை:
விவாகரத்து என்பது சிவில் வழக்கு. இதை ஏன் கிரிமினல் குற்றத்தில் சேர்க்க வேண்டும். கணவர் சிறை சென்றுவிட்டால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளை கவனிப்பது யார்? என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதவாதத்தை ‘முத்தலாக்’ முறைக்குள் திணிக்க பாஜக முயல்கிறது என இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.