டிடிவி தினகரனுடன் கள்ளக்கூட்டணி அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் முயன்றார் என அமமுகவினர் பகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாருக்கும், பாஜக கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இறுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி வாகைசூடி எம்.பி. ஆனார். இந்த முறையும் காங்கிரஸ்-பாஜக இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என அங்கே பயங்கர அதிருப்தி நிலவி வருகிறது.
மீனவ சமுதாயத்தினர் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இதனால் பாஜகவுக்கு அவர்கள் ஓட்டு நிச்சயம் கிடைக்காது.
அதேவேளை அந்த ஓட்டுக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு சென்றுவிட்டால் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி கேள்விக் குறியாகிவிடும்.
இதனால் அங்கு சிறுபான்மை இனத்தவரை நிற்க வைத்து, அவர்களின் ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள அமமுகவிடம் கள்ளக் கூட்டணி வைக்க பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
இந்த விசயத்தை டிடிவி தினகரன் பட்டென்று உடைத்து விட்டார். பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தத்தின் மூலம் தூது அனுப்பினார் என குற்றம்சாட்டினார்.
அதேவேளை பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தமும் பதிலுக்கு டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவைக் கைப்பற்ற பாஜகவுடன் இணக்கமாக செல்ல டிடிவி தினகரன் பாஜக தலைவர்களைச் சந்திக்க முயன்றார்.
அவரின் ஆசை நிறைவேறவில்லை என இப்படி கபட நாடகம் ஆடுகின்றார் என டிடிவியின் கள்ளக்கூட்டணி தூதை அம்பலப்படுத்தி உள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க அனைத்துக் கட்சிகளும் சுயலாபத்திற்காக என்னென்ன தில்லுமுல்லு வேலைகளைச் செய்துள்ளனர் என ஒவ்வொன்றாக அவர்களின் வாயில் இருந்தே வெளிவருகிறது.