Home Latest News Tamil சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தில் ₹45 இலட்சத்திற்கான காசோலை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது

சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தில் ₹45 இலட்சத்திற்கான காசோலை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது

தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தில்

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் துறை கட்டுபாட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் இறந்த சம்பவத்தில் ₹45 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பணம் வழங்கும் கடிதத்தை இறந்த பி. ஜெயராஜ் மற்றும் ஜே. பென்னிக்ஸ் ஆகியோரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.

தி.மு.க சார்பில் ₹25 இலட்சம்

தி.மு.க வை சேர்ந்தவரும் மற்றும் தூத்துக்குடியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன கனிமொழி கருணாநிதி, இந்த ₹.25 இலட்சத்திற்கான காசோலையை தி.மு.க தலைவர் அறிவித்த படி இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.

தமிழக அரசு சார்பில் ₹20 இலட்சம் 

பிறகு, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி ₹.20 இலட்சத்தினை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.

இத்தகைய சம்பவத்தில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம்

காவல் துறை கட்டுபாட்டில் இருந்தவர்கள் இறந்த சம்பவம் குறித்து கனிமொழி, இத்தகைய சம்பவம் நடப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இந்நிலை மாறவேண்டும் எனவும் “இனி எந்த குடும்பத்திற்கும் இத்தகைய நிலை வரக்கூடாது” எனவும் தெரிவித்தார்.

அரசு பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கை அரசு எடுக்கும்

கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில் “இது மாதிரியான சம்பவம் நடக்கும் பொழுது, அரசு பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கை அரசு எடுக்கும்,” என தெரிவித்தார்.

மேலும் இத்தகைய அரிதான சம்பவத்தால் அனைத்து காவலர்களை குறை கூற முடியாது. “சென்னை மற்றும் கோவை காவல் நிலையங்கள் தேசிய விருதுகளை வாங்கியுள்ளன” என மேலும் அவர் தெரிவித்தார்.

Previous articleSathankulam: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்: கொந்தளித்த சினிமா பிரபலங்கள்!
Next article#27YearsOfUzhaippali: 27 ஆண்டுகளை கடந்த ரஜினியின் உழைப்பாளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here