Home சினிமா கோலிவுட் காதல் குறித்து பேசி அழுத வனிதா!

காதல் குறித்து பேசி அழுத வனிதா!

267
0
Vanitha Love Marriage

Vanitha; காதல் குறித்து பேசி அழுத வனிதா! பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா தனது 3ஆவது காதல் திருமணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

வனிதா காதல் குறித்து பேசி அழுதுள்ளார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதோடு, சர்ச்சையிலும் சிக்கினார்.

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றதோடு, தனது சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், பிக் பாஸ் வனிதா வேறு தற்போது இருக்கும் வனிதா வேறு என்று அனைவருக்கும் புரிய வைத்தார்.

இதையடுத்து, அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், தனது சமையல் குறிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தான் கடந்த 17 ஆம் தேதி வனிதா 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆம், பீட்டர் பால் என்பவருடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

வரும் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தனது 3ஆவது திருமணத்திற்கு என்ன காரணம், காதல் எப்படி உருவானது என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: லாக்டவுன் காலத்தில் எனது யூடியூப் சேனலை பார்த்து கொண்ட பணியாளர்கள் இல்லாமல் நான் அவதிப்பட்டேன்.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் செய்து வந்த பீட்டர் பால் என்னுடன் நட்பாக இருந்தார். அனிமேஷன் வேலை செய்து வந்த அவர் என்னிடம் யூடியூப் சேனல் பற்றி கேட்டார்.

அது பற்றி நான் கூறிய போது ஓடி வந்து எனக்கு உதவினார். லாக்டவுன் காலத்தில் என்னிடம் வந்து காதல் புரோபோஷ் செய்தார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.

இந்த காதல் பற்றி அறிந்த எனது மகள் மிகவும் சந்தோஷப்பட்டாள். நாங்கள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் உங்களுக்கு என்று ஒரு துணை முக்கியம்.  இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று யோசித்து பேசினாள்.

மேலும், திருமண நாள் பற்றி எனது அம்மாவும் நானும் கலந்து பேசினோம். எனது கண்ணில் ஜூன் 27 ஆம் தேதி தான் தென்பட்டது. அந்த நாள் எனது அம்மா – அப்பாவின் திருமண நாள். அதே நாளில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பீட்டர் பாலிடம் கூறினேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார்.

எங்களது திருமணத்திற்கான மோதிரத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளோம். ஆனால், லாக்டவுன் என்பதால் டெல்லியிலிருந்து வரவில்லை. அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்றும் தெரியவில்லை. இப்படியாக தனது திருமணம் நடக்கப்போகிறது என்று கூறி அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது பெயரையும் வனிதா பீட்டர் என்று மாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பாலின் பெயரை கையில் டாட்டூ போட்டுள்ளார். இதே போன்று பீட்டர் பாலும், வனிதாவின் பெயரை கையில் டாட்டூ போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஞாபகம் வருதே…ஞாபகம் வருதே! வைரலாகும் நடிகர்களின் பள்ளிக்கூட புகைப்படங்கள்!
Next articleதென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here