Home சினிமா கோலிவுட் ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்!

ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்!

283
0
Danny Movie

Danny Release On Z5; ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்! வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷின் படங்களைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், திரைக்கு வர இருந்த கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான படங்கள் முடங்கியுள்ளன.

இதில், தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது.

எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரியாத போது, புதிய படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அந்த வகையில், ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் டேனி என்ற படம் நேரடியாக ஜி5 தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ்நாட்டில் புதன் கிழமை மட்டும் 2,865 கொரோனா தொற்றுகள்
Next articleதளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here