Home சினிமா கோலிவுட் ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க: மீண்டும் சென்னை – 600 028 பாய்ஸ்!

ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க: மீண்டும் சென்னை – 600 028 பாய்ஸ்!

333
0
VP Boys Lockdown

ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க: மீண்டும் சென்னை – 28 பாய்ஸ்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை – 600 028 கூட்டணி இணைந்துள்ளது.

வெங்கட் பிரபுவின் சென்னை 600 028 கூட்டணி மீண்டும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் சென்னை 600 028.

இப்படத்தில் ஜெய், சிவா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் வெளியானது. இந்தப் படத்திலும் சென்னை 600 028 படத்தில் நடித்த பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் சென்னை – 600 028 பாய்ஸ் ஒன்று கூடியுள்ளனர். ஆம், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கின்றனர்.

அப்படியிருக்கும் போது சென்னை – 600 028 பாய்ஸ் கூட்டணி மீண்டும் ஒன்றுகூடியுள்ளது. கொரோனா விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வெங்கட் பிரபு அண்ட் டீம் ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை 600 028 படக்குழுவினரை வீட்டில் இருந்தபடியே நடிக்க வைத்து வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கையை கழுவவேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளி ஆகியவற்றை வலியுறுத்தி அந்த வீடியோவில் நடித்துள்ளனர்.

இதில், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், சிவா கை கழுவுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, VPBoysLockdown என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகிங் பட காமெடியை பதிவிட்டு வாழ்த்து சொன்ன வடிவேலு!
Next articleRRR: மகேஷ் பாபு உடன் இணையும் எஸ்.எஸ். ராஜமௌலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here