Nanban Vijay Atlee Dance Video; பார்ட்டியில் போக்கிரி பொங்கல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்: வைரலாகும் வீடியோ! நண்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய், தனது போக்கிரி பொங்கல் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்ட்டியில் போக்கிரி பொங்கல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட Vijay Atlee Dance Video விஜய்யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த படம் நண்பன் Nanban. பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வந்த 3 இடியட்ஸ் (2009) படத்தின் தமிழ் ரீமேக்காக நண்பன் படம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நண்பன் படம் திரைக்கு வந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
நண்பன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அதே ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது.
கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும் மையப்படுத்தி திரைக்கு வந்த நண்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதையடுத்து, நண்பன் படத்தின் வெற்றி விழா Nanban Success Party கொண்டாட்டப்பட்டது. இதில், விஜய், அட்லீ, ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்ற போக்கிரி பொங்கல் Pokkiri Pongal பாடல் ஒலிக்கப்பட்டது. இதற்கு விஜய், அட்லி ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து இது ஒரு அரிய காட்சி என்று மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் – அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.