Home சினிமா கோலிவுட் விஜய்க்கு ஜான் துரைராஜ் ஓகே: அதென்ன விஜய் சேதுபதிக்கு பவானினு பேரு!

விஜய்க்கு ஜான் துரைராஜ் ஓகே: அதென்ன விஜய் சேதுபதிக்கு பவானினு பேரு!

373
0
Vijay and Vijay Sethupathi Character Name

Master Vijay Character Name; விஜய்க்கு ஜான் துரைராஜ் ஓகே: அதென்ன விஜய் சேதுபதிக்கு பவானினு பேரு! மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகியுள்ளது.

கல்விமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவித்தபடி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இந்த நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களின் பெயர் வெளியாகியுள்ளது.

அதன்படி விஜய் ஜான் துரைராஜ் (John Durairaj aka JD) என்ற ஜேடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், செயின்ட் ஜெஃப்பரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் டீனாக நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்யின் கல்லூரி ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்யைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், விஜய் சேதுபதி பவானி ஆசிர்வாதம் (Bhaavani Archivatham) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

விஜய்க்கு வில்லன் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவரது தங்கையாக மாளவிகா மோகனன் நடித்துள்ளாராம்.

அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி இது ஹீரோ வில்லன் கதை இல்லை. இரண்டு ஹீரோ சம்பந்தப்பட்ட கதை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleவான் தூறல்கள் லிரிக் வீடியோ வெளியீடு!
Next article19/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here