Master Audio Launch; மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு சில காட்சிகளில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விஜய் இயக்குநர் இடத்தில் இருந்து கொண்டு லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவியல், மாநகரம், கைதி ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 4ஆவது படம் மாஸ்டர் (Master).
மாஸ்டர் படத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்டர் படத்தின் இசை (Master Audio Launch) வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது.
ஆனால், சென்னையா? கோயம்புத்தூரா? என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை. எனினும், சன் தொலைக்காட்சி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் (Master Second Single) விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில், விஜய் இயக்குநராக ஒரு சில காட்சிகளில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திற்கு அமலா பாலின் ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் திரைக்கதை எழுதியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.
ஒருநாள் இயக்குநர் விஜய் (Vijay Become Director)
அவர்கள் இருவரும் நடித்த காட்சியை விஜய், கேமரா, ரோலிங், ஆக்ஷன் சொல்லி ஒருநாள் மட்டும் இயக்குநராக இருந்திருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் அவர்கள் இருவரும் நடித்த காட்சியை விஜய் இயக்கியுள்ளார் என்கிறது தகவல்.
அவர்கள் இருவருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்து, அந்த காட்சிக்கு மட்டும் ஒருநாள் இயக்குநராக (Vijay Become Director) இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விஜய் இயக்குநராக இருந்ததை மெய்சிலிர்த்துப் பார்த்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக விஜய் வெளிநாடு சென்றுள்ளார். குறுகிய கால சுற்றுலாவாக அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிகர், பின்னணிப் பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நண்பர்கள், இன்னிசை மழை ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது மாஸ்டர் படத்தின் மூலம் ஒருநாள் இயக்குநராகவும் (Vijay Become Director) அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.