Home சினிமா கோலிவுட் இதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா?

இதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா?

404
0
Vijay Master Fight Scene

Master Fight Scene;இதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா? விஜய் இதுவரை மெட்ரோ ரயிலில் செல்லவில்லையாம். ஆனால், மாஸ்டருக்காக கிட்டத்தட்ட 3 மணிநேரம் மெட்ரோ ரயிலில் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டதாம்.

மாஸ்டர் (Master Fight Scene) படம் பற்றிய சண்டைக் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் அறிவித்தபடி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் (Vijay Metro Train Travel) நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரொனா வைரஸ் (Corona Virus) காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்த மாதம் திரைக்கு வர வேண்டிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், அந்தப் படங்களுக்குதான் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் சண்டைக் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த சண்டைக் காட்சிதான் படத்தின் முதல் சண்டைக்காட்சி என்றும், நன்றாக வந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும், சென்னை மெட்ரோவில் இந்த சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 மணிநேரம் வாடகைக்கு எடுத்துள்ளார்களாம்.

இதுவரை விஜய் சென்னை மெட்ரோவில் சென்றதில்லை என்ற போதிலும், மாஸ்டர் படத்தின் மூலம் மெட்ரோவிலே சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு, மெட்ரோவில் இருந்தபடி சென்னையை ரசித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், மெட்ரோ ரயிலில் எங்கிருந்து சென்றார் என்ற தகவல் வரவில்லை.

எனினும், இதுவே இப்போது விஜய் ரசிகர்களுக்கு போதும். இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலரும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமகிழ்ச்சியில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடம்
Next articleVisu: சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here