Thalapathy 65 Pongal Release; படமே உறுதி ஆகல: அதுக்கள்ள ரிலீஸ் தேதியா? பலே பலே! விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது தகவல் வெளியாகி வருகிறது.
பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி64 படமான மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, நாசர் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இவ்வளவு ஏன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்து மாஸ்டர் டிரைலருக்காகவும், மாஸ்டருக்காவும் உலகமே வெயிட்டிங்.
கடந்த 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆதலால், வெளிவரவில்லை. மறுபடியும், 2 நாட்கள் கழித்து வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏப்ரல் 9 ஆம் தேதி படம் அறிவித்தபடி வெளியாகாது என்றும், மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 65 ரிலீஸ் தேதி
இந்த நிலையில், தளபதி 65 படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது, தளபதி 65 படம் பொங்கல் ரிலீஸ் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தளபதி 65 படம் உருவாக இருப்பதாக அண்மையில், தகவல் வெளியானது.
இந்தப் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. மேலும், காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிக்கிறது என்று தகவல் வந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் ஒருபுறம் இருக்க, சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா தளபதி 65 படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தளபதி 65 இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், தளபதி 65 பொங்கல் ரிலீஸ் என்று முக்கிய தகவல் வந்துள்ளது. அதோடு ஹலோவில், தளபதி 65 பொங்கல் ரிலீஸ் என்று டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.