Home சினிமா கோலிவுட் தங்கை வித்யா உடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தங்கை வித்யா உடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் குடும்ப புகைப்படம்!

601
0
Vijay Sister Vidhya

தங்கை வித்யா உடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் குடும்ப புகைப்படம்! விஜய் அவரது தங்கை வித்யா உடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மற்றும் அவரது தங்கை வித்யா ஆகியோரது சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா காரணமாக ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

விஜய் தங்கையின் புகைப்படம்

கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பலரும் வெளியில் வருகின்றனர்.

கொரோனா லாக்டவுனில் சினிமா பிரபலங்கள் பலரும், சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, போட்டோஷூட் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், வீட்டிலேயே சும்மா இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல், பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதோடு குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய்யின் சிறு வயது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vidhya

அதில், விஜய், அவரது சகோதரி வித்யா மற்றும் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகர் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை பாசம் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். 2 வயதில் உடல் நலக்குறைவால் அவரது தங்கை வித்யா பரிதாபமாக பலியானார்.

அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த நிலையில், வித்யா இறந்த துயர் தாங்க முடியாமல், அன்றிலிருந்து விஜய் அமைதி காத்து வருவதாக அம்மா ஷோபா கூட கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா ரணகளத்திலும் குதூகளம், தமிழகத்தில் சில இடங்களில் மழை
Next articleரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறை: ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here