Will Vijay Donate; விஜய் நிதியுதவி கொடுப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், விஜய் கொரோனா நிவாரண நிதியுதவி அளிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் நிதியுதவி கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், மேற்கொண்டு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுகிறது. அதோடு, படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதும் சந்தேகம் தான்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கிணங்க, ரஜினிகாந்த், அஜித், பிரகாஷ் ராஜ், சூர்யா குடும்பத்தார், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ஐசரி கணேஷ், யோகி பாபு, ஹரிஷ் கல்யாண், ஜெகன், விஜய் மக்கள் இயக்கம் என்று அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் விஜய் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. விஜய் ரசிகர்கள் என்னதான் உதவி செய்தாலும், அது ரசிகர்களின் சமூக சேவை பட்டியிலில் இடம்பெறும்.
ஆனால், ஒரு நடிகராக விஜய் இதுவரை நிதியுதவி அளிக்கவில்லை. இவ்வளவு ஏன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ கூட வெளியிடவில்லை.
இந்த நிலையில்தான் பிகில் படத்தில் இடம்பெற்று ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
அதை வைத்து ஏற்கனவே பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் நடித்துவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜய் இதுவரை மௌனம் காப்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதன் காரணமாக விஜய் நிதியுதவி வழங்குவார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் கொரோனா நிதியுதவி வழங்குவார் என்ற நம்பிக்கையில் Vijay Donation Expectation, Will Vijay Donate ஆகிய ஹலோ ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.