Home சினிமா கோலிவுட் விஷாலின் அதிரடி ஆக்‌ஷனில் வெளிவரும் சக்ரா டிரைலர்!

விஷாலின் அதிரடி ஆக்‌ஷனில் வெளிவரும் சக்ரா டிரைலர்!

294
0
Chakra Trailer

Chakra Trailer; கொரோனா பீதியிலும் வெளிவரும் சக்ரா டிரைலர்! நாடு முழுவதும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சக்ரா டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் உருவாகி வரும் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநயன்தாராவை விட மாளவிகா மோகனனுக்கு அதிக சம்பளமா?
Next articleதனி ஒருவன் 2 எப்போது தொடங்கப்படும்? ஜெயம் ரவி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here