பரவை முனியம்மா இறப்பு: இரக்கமற்ற விவேக்! சினிமா பிரபலங்களில் சிலர் பாரபட்சம் பார்க்கவும் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கு இருக்கும் ஈவு, இரக்கம் கூட சில சினிமா பிரபலங்களுக்கு இல்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அதில், முக்கியமானவர்களாக விக்ரம், விவேக் ஆகியோர் கருதப்படுகின்றனர். ஆம், பரவை முனியம்மாவின் மறைவிற்கு யாருக்கோ, தெரியாத நபருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன், என்று பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டாரே தவிர அவரது டுவிட்டரில் உண்மையாகவே வருந்தும் அளவிற்கு பதிவு இல்லை. சும்மா, ஏனோ, தானோ என்று தான் இருக்கிறது.
இது எது, பரவை முனியம்மா என்பதலா? இதுவே விசுவிற்கோ, அல்லது சேதுராமனுக்கோ இது போன்று பதிவிட்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை…
நடிகர் விசு மறைந்த போது விவேக் தனது டுவிட்டரில், மிக நேர்மையாக, உண்மையாக, கண்ணியமாக அதே நேரம் கண்டிப்பாக வாழ்ந்து, நம்மை பிரிந்து இருக்கும் விசு அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதய அஞ்சலி.
நேரில் வந்து இறுதி மரியாதை செய்ய முடியாததற்ற்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதே போன்று நடிகரும், மருத்துவருமான சேதுராமன், மறைவிற்கு விவேக் டுவிட்டரில், என்ன ஒரு அசைக்க முடியாத அன்பான கண்ணியமான அக்கறையுள்ள இனிமையான நபர்!
அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது இதயம் ஆழ்ந்த இரங்கலை உணர்ந்தது. திடீர் மறைவு ஒரு விதி என்றால், நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, ஆனால் வெறுக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் விவேக்கின் இரக்கமற்ற செயலுக்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். பரவை முனியம்மா உடன் இணைந்து விவேக், காதல் சடுகுடு, சண்டை, தூள், மகனே என் மருமகனே, பசுபதி ராசக்காபாளையம், தக திமி தா என்று பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், அவர் உயிரோடு இருக்கும் போது விவேக் நேரில் சென்று கூட பார்க்கவில்லை.
சிவகார்த்திகேயன் மட்டுமே தன்னை மருத்துவமனையில் வந்து சந்தித்ததாக பரவை முனியம்மாவே வருத்தத்துடன் கூறியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரவை முனியம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கூட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் உதவியிருந்தார். சினிமா பிரபலங்கள் விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்பட ஒரு சிலர் மட்டுமே உதவியுள்ளனர்.
ஆனால், விவேக், விக்ரம் அப்படி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. விவேக் கூட டுவிட்டரில் ஏதோ பதிவிட்டுள்ளார்.
ஆனால், விக்ரம் அப்படி ஏதும் இல்லை. இதனால், அவரது ரசிகர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.
எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், பரவை முனியம்மாவின் பாடல்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.