Home சினிமா கோலிவுட் விஜய் படம் கூட மறந்துபோச்சு போல: நடிகர் விவேக் தப்பான டுவீட்!

விஜய் படம் கூட மறந்துபோச்சு போல: நடிகர் விவேக் தப்பான டுவீட்!

0
1056
Vivek Wrong Tweet

Vivek Wrong Tweet; விஜய் படம் கூட மறந்துபோச்சு போல: நடிகர் விவேக் தப்பான டுவீட்! விஜய் நடித்த ஷாஜகான் படத்திற்குப் பதிலாக இது ப்ரியமானவளே படம் என்று நினைப்பதாக டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை ரிவீட் செய்து தெரிவித்துள்ளார்.

ஷாஜகான் படத்திற்குப் பதிலாக ப்ரியமானவளே என்று நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இயக்குநர் கே எஸ் ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா பாலோட் (அறிமுகம்), மீனா, விவேக், கிருஷ்ணா, கோவை சரளா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஷாஜகான்.

காதலுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

காதலிக்கும் ஜோடிகளுக்கு பெற்றோரையும் மீறி விஜய் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதே போன்று தான் காதலித்த பெண், தன்னை காதலிக்கவில்லை, தனது நண்பனை தான் காதலிக்கிறார் என்று தெரிந்தும், அவர்களை சேர்த்து வைக்கும் ரோலில் விஜய் நடித்திருந்தார்.

சாதி, மதம், மொழி, நாடு இவற்றை கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்… என்று காதலுக்கே மரியாதை கொடுத்த படம் ஷாஜகான். காதலி மும்தாஜிற்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், ஷாஜகான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் வரும் ஒரு காட்சியை கோலிவுட் ஸ்ட்ரீட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதனை ரீடுவிட் செய்த விவேக், இது எந்த படம் என்று நினைவில்லை! May b priyamanavale?!? என்று பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சார் இது ப்ரியமானவளே படம் இல்லை. விஜய் நடித்த ஷாஜகான் என்று குறிப்பிட்டு டுவீட் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில், இனிமேல், யாரும் என்னை டேக் செய்து டுவீட் பதிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here